shadow

நம்பிக்கையில்லா தீர்மானம்: சிவசேனா, அதிமுக நிலை என்ன?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக இன்று பாராளுமன்றத்தின் மக்களவையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றாலும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் சற்றுமுன் தொடங்கியது. விவாதம் தொடங்கிய சில நிமிடங்களில் பிஜூ ஜனதாதளம் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேபோல் அதிமுக எம்பிக்களும் வெளிநடப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வெற்றி வாக்குறுதிகளை ஆந்திர மக்களுக்கு கொடுத்தார்கள் மத்திய பாஜக அரசு எங்களை நிச்சயமற்ற தன்மைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது விவாதத்தில் பேசிய டிடிபி கட்சி எம்பி ஜெயதேவ் தெரிவித்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply