டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா

jayalalithaa02தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று அவர் டாக்டர்களுக்கு ஆங்கிலத்தில் நன்றி என்று தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இதுவரை படுத்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை, இருக்கையில் அமர வைப்பதற்கான நடவடிக்கையில் டாக்டர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முதல்வரின் மருத்துவ அறிக்கையை அப்பல்லோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவ அறிக்கை வெளியிடும் அளவுக்கு தற்போது இல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாச உதவியுடன், நோய் எதிர்ப்பு மருந்துகள், பிசியோதெரபி முதல்வருக்கு வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *