கமலுடன் இணையும் வாய்ப்பே இல்லை: ரஜினியின் மெகா திட்டம் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பாக கமல் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் ரஜினி தரப்பினர் கூறி வருகின்றனர்

ரஜினி ஆரம்பத்தில் கூறியதுபோல் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் அதிமுக திமுக உள்பட பல முக்கிய கட்சியில் உள்ள பிரமுகர்கள் வந்தால் அவர்களை வரவேற்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் கமலஹாசனும் கட்சியை கலைத்துவிட்டு ரஜினிகாந்த் கட்சியில் இணைந்தால் அவர் அதனை ஏற்றுக் கொள்வார் என்றும் அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும் விருப்பம் அவருக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது இது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் கமல் ரஜினி அரசியலில் இணையும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது

அதேபோல் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் செய்தியும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் மட்டுமே இந்த படம் இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *