வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று பெரும்பாலான தொண்டர்கள் கருதுவதால் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க தனித்து போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

நேற்று உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள எறஞ்சி என்ற இடத்தில் நடந்த தேமுதிக கட்சியின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பெசிய விஜயகாந்த், ‘இனிமேல் தமிழகத்தில் ஜாதி, மதங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது என்றும், மக்களுக்கு காசு கொடுத்து ஓட்டுக்களை ஏமாற்றி விலைக்கு வாங்கும் அரசியல்வாதிகளின் தந்திரம் இனி பலிக்காது என்றும் கூறினார்.

முல்லை பெரியாறு விவகாரத்தை தீர்க்க முயற்சி செய்யாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த விஜயகாந்த், ஊழல் புரியும் ஆட்சியாளர்களை மக்கள் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply