shadow

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் முக்கிய விஐபிக்கள்
nitesh
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் நிதீஷ்குமார்-லாலுபிரசாத் யாதவ் ஆகியோர்களின் மெகா கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. புதிய முதல்வராக நிதீஷ்குமார் வரும் 20-ம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவிற்கு சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சிகளை எதிர்க்கும் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேரும் விழாவாக, இந்த பதவியேற்பு விழா இருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்க்க வலுவான மெகா கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக  உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அசாம் முதல்வர் தருண் கோகாய், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, ஹேமந்த் சோரன், முன்னாள் பிரதமர் தேவகவுடா உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்வது குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிதீஷ்குமார் தலைமையிலான  புதிய அரசில் லாலு கட்சியை சேர்ந்த 16 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் ஐஜத.வில் 15 அமைச்சர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 அமைச்சர்களும் இடம்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: A number of leaders, including Congress chief Sonia Gandhi, Delhi Chief Minister Arvind Kejriwal and West Bengal Chief Minister Mamta Banerjee, will attend Bihar Chief Minister Nitish Kumar’s oath-taking ceremony in what is being described as “a new beginning of opposition unity in the country”.

Leave a Reply