நிர்மலா சீதாராமன் அடுத்த தமிழக முதல்வரா?

தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மக்களை கவரும் வகையில் இல்லை என்பதால் தலைமையை மாற்ற பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் உள்பட எட்டு அமைச்சர்கள் பாஜக தலைவர் அமீத்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிர்மலா சீதாரமன் உள்பட எட்டு அமைச்சர்களும் விரைவில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி பணிக்கு திரும்புவார்கள் என தெரிகிறது.

ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டாலும், நிர்மலா சீதாராமன், பிறப்பால் தமிழர் என்பதால் அவரை தமிழக பாஜக தலைவராக்கி முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்த பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், மிகவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *