shadow

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் விடுதலையாகும் சிறார் குறித்து மேனகா காந்தி சர்ச்சை கருத்து
menaka gandhi
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்து ஒன்றில் மருத்துவ மாணவி ஒருவர் ஆறு பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் ஆறு பேர்கள் கைது செய்யப்பட்டபோதிலும், ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதியுள்ள ஐவரில் ஒருவர் சிறார் என்பதால் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிறார் அடுத்தமாதம் 15ஆம் தேதி விடுதலையாகவுள்ளார். இவருடைய விடுதலை குறித்து கருத்து தெரிவித்த  பெண்கள் மற்றும் சிறார் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, “சட்டப்படி தண்டனை முடிந்து சிறார் குற்றவாளி தற்போது விடுதலை ஆகிறார். விடுதலைக்கு பின் அவர் வேறொரு குற்றம் செய்யும் வரை அவரை ஒன்றும் செய்ய முடியாது என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார்.

இந்த வழக்கில் போதிய நீதி வழங்கப்படவில்லை என்று மேனகா காந்தி விமர்சனம் செய்திருப்பது சட்டத்தின் மீதான விமர்சனமாக கருதப்படுகிறது என சமூக வலைத்தளங்களில் பலர் மேனகா காந்திக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply