shadow

கடனை திருப்பி செலுத்த முடியாது: பஞ்சாப் வங்கிக்கு நீரவ் மோடி கடிதம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து உத்தரவாதம் பெற்று வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக ரூ.11400 கோடி கடன்பெற்று தலைமறைவாகிவிட்டார் பிரபல வைரவியாபாரி நீரவ் மோடி. அவரை கண்டுபிடித்து இந்தியா அழைத்து விசாரணை செய்ய சிபிஐ பெரும் முயற்சியில் உள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நீரவ் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் வங்கிகளில்ல் பெற்ற கடன் ரூ.5000 கோடிதான். ஆனால் அதைத் திருப்பிக் கொடுப்பதற்காக அனைத்து வழிகளையும் வங்கி நிர்வாகம் மூடிவிட்டது. அவசரப்பட்டு தவறான தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டதால் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போய்விட்டது. இதனால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்றும் நிரவ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது நிறுவனத்தின் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது அதற்கான தொகையையாவது வங்கிலிருந்து எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று நிரவ் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply