Chennai Today News

டிரம்புடன் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கள்ளத்தொடர்பா? அதிர வைக்கும் குற்றச்சாட்டு

டிரம்புடன் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கள்ளத்தொடர்பா? அதிர வைக்கும் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே ஒருசில பெண்கள் குறித்த குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பதவி வகிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே அவர்களும் டிரம்புடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான மைக்கேல் வோல்ஃப் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட ‘பயர் அன்ட் பியூரி’ என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிக்கி ஹாலே தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்

அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், இதுவொரு அருவெறுப்பான பழிபோடும் செயல் என்றும் கூறிய நிக்கி ஹாலே, அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் செய்யும் தனி விமானத்தில் தான் ஒரேயொரு முறை மட்டும் பயணம் செய்ததாகவும், அப்போது கூட தங்களுடன் பலர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களால் தன்னை நிலைகுலைய வைத்துவிட முடியாதுஅ என்றும் ஒவ்வொரு முறை இதுபோன்ற பழிக்கு தான் இலக்காகும்போதும் அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் ஏற்படுவதாகவும் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!