bokoharamஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது பணயக்கைதிகளின் தலையை வெட்டி அதன் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துக்கொண்டிருக்கும் நிலையில், நைஜீரியாவை ஆட்டிப் படைத்து வரும் போகோஹராம் தீவிரவாதிகளும் தற்போது ஒரு பணயக்கைதிகள் இருவரின் தலையை கத்தியால் அறுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஒரு தீவிரவாதி முகத்தில் துணியை சுற்றிக்கொண்டும், இன்னொரு தீவிரவாதி முகத்தை மறைக்காமலும் பணயக்கைதிகள் செய்த குற்றத்தை வாசித்துவிட்டு பின்னர் இருவரின் கழுத்தையும் கத்தியால் துடிதுடிக்க அறுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ வெளியானதும் நைஜீரிய அரசு தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு நைஜீரிய அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

bokoharam 1

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *