Chennai Today News

உலகக்கோப்பை கால்பந்து 2018: நைஜீரியா அணியை வீழ்த்தியது குரோசியா

உலகக்கோப்பை கால்பந்து 2018: நைஜீரியா அணியை வீழ்த்தியது குரோசியா

lஉலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள குரோசியா, நைஜீரியா அணிகள் மோதின.

இந்த போட்டியின், முதல் பாதிநேர ஆட்டத்தின் 32-வது நிமிடம் குரோசியா வீரர் கோல் அடிக்க முயற்சித்தார். அந்த பந்து நைஜீரியா வீரர் எடிபோவின் காலில் பட்டு சுய கோலாக மாறியது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற 2வது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடம் குரோசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் குரோசியா வீரர் மோட்ரிச் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில், குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!