shadow

next super starபிரபல தமிழ் முன்னணி வார இதழ் குமுதம் நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டியில் திரையுலக ரசிகர்கள் கடந்த சில நாட்களாக வெகு ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். இந்த ஓட்டெட்டுப்பில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த நாயகர்களுக்கு வாக்களிக்க சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பிரச்சாரம் செய்தனர்.

இந்த தேர்தலில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி நடந்ததாக தெரிகிறது. ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இருதரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு கொண்டு தங்கள் தலைவருக்காக வாக்குகளை சேகரித்தனர். இந்நிலையில் நேற்று அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற முடிவை குமுதம் அறிவித்தது.

10390462_540295852759723_3611996388508899461_nஇதில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை இளைய தளபதி விஜய் 12.80,300 வாக்குகள் பெற்று கைப்பற்றினார். விஜய்க்கு அடுத்தபடியாக அஜீத்துக்கு 12,17,650 வாக்குகள் கிடைத்தது. சூர்யா 5,47,050 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றார்.

தனுஷ் நான்காவது இடத்தையும், விக்ரம் ஐந்தாவது இடத்தையும், சிம்பு ஆறாவது இடத்தையும், ஆர்யா ஏழாவது இடத்தையும் ஜீவா எட்டாவது இடத்தையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply