பிறந்த சில நிமிடங்களில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளங்குழந்தை. அதிர்ச்சி தகவல்
los angels
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிசியாக வாகனங்கள் செல்லக்கூடிய சாலை ஒன்றில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததை அந்த வழியே சென்ற ஒருவர் தற்செயலாக பார்த்ததால் தற்போது அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள காம்ப்டன் ரிவர்பெட் என்ற இடத்தின் பிசியான சாலையில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு திடுக்கிடுள்ளார். அப்போது அந்த சாலையின் பைக் செல்லும் பாதை அருகே ஒரு சிறிய குழியில் பெண் குழந்தை ஒன்று உயிருடன் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அந்த நபர் கொடுத்த தகவலை அடுத்து தேசிய நெடுஞ்சாலை போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த குழந்தை நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. வாகனத்தில் சென்ற யாரோ ஒரு பெண் குழந்தை பெற்று, அந்த குழந்தையை அருகில் இருந்த பள்ளத்தில் போட்டுவிட்டு சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

English Summary: Newborn girl found buried alive in California riverbed, rescued by passersby

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *