shadow

இலங்கை அணியை மீண்டும் பந்தாடிய நியூசிலாந்து

cricketஇலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஏற்கனவே 7 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

நேற்றி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் அதிரடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 27.4 ஓவர்களில் 117 ரன்களில்  ஆட்டமிழந்தது. பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 8.2 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றி பெற்றது.

40 பந்துகளில் 93 ரன்கள் அடித்த குப்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான் 3வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறும்.

Chennai Today News: New Zealand won by 10 wickets against Srilanka

Leave a Reply