shadow

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது நியூசிலாந்து

New Zealand v Sri Lanka: Game 5நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒருபோட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று 5வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 294 ரன்கள் குவித்தது. குப்தில் அபாரமான சதமடித்தார்.

295 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி, 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 258 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. மாத்யூஸ் மட்டும் ஓரளவு நிலைத்து ஆடி 95 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் காரணமாக நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

Chennai Today News: New Zealand won 5th oneday by 36 runs and series

Leave a Reply