shadow

கொல்கத்தா டெஸ்ட் போட்டி: மழையால் 2ஆம் நாள் ஆட்டம் பாதிப்பு

cricket2இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி 316 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரே 87 ரன்களும், ரஹானே 77 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த அணி 24.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது தடைபட்டுள்ளது.

இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply