ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தவிர்க்க போராடும் நியூசிலாந்து
CRICKET-NZL-AUS
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 54 பந்துகளில் சதமடித்து உலக சாதனை செய்து நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் போட்டியை பரபரப்பாக மாற்றினார். ஆயினும் ஆஸ்திரேலியா அணியினர்களின் பதிலடியால் நியூசிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 370 ரன்கள் எடுத்த நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தனது அதிரடி பேட்டிங்கால் 505 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பர்ன்ஸ் 17 ரன்களும், கேப்டன் ஸ்மித 138 ரன்களும் குவித்தன்ர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி44 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் இரண்டு நாள் மீதமிருக்கும் நிலையில் 14 ரன்கள் பின்தங்கியுள்ள நியூசிலாந்து தோல்வியை தவிர்க்குமா? அல்லது போட்டியை டிரா செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *