shadow

voter idபாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் நபர்கள் படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து  வட்டாட்சியர், நகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் அல்லது, மாநகராட்சிக் பகுதிகளில் மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என்றுன் அவர்  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்துடன் இருப்பிட மற்றும் வயதுச் சான்றிதழ்களை இணைக்க வேண்டியது அவசியம்.

பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் செய்பவர்கள் படிவம் எட்டையும், பெயர் நீக்கத்துக்கு படிவம் ஏழையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை //www.elections.tn.gov.in/eregistration/ என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply