shadow

Malicious-virus-600x399

இன்று பலர் ஆன்லைன் பேங்கிங் மூலம் அவர்களது வங்கி கணக்கை பராமரித்து வருகின்றனர். அப்படி பராமரிக்கும் போது அவர்கள் என்னதான் பாஸ்வேர்டு வைத்து மிகவும் எச்சரிக்கையாக இருந்தாலும் அதற்கும் தற்போது ஆபத்து வந்துள்ளதாக டென்மார்க்கின் செக்கியூரிட்டி பிரிவான சிஸ் தெரிவித்துள்ளது.

இது வெளியிட்டுள்ள தகவலின்படி ஆன்லைன் பேங்கிங்கை குறிவைத்து தகவல்களை திருடும் நோக்கில் ஒரு புதிய வைரஸ் உருவாக்கப்பட்டு பரவவிடப்பட்டுள்ளது என எச்சரித்துள்ளது.

இந்த வைரஸ் ஏற்கனவே இணையதள தகவல் திருடும் வைரஸ்களை போல் அல்லாமல் வங்கிகளை குறிவைத்து ஆன்லைன் பேங்கிங் மூலம் மிகப்பெரிய வங்கிகளில் இருந்து தகவல்களையும் பணத்தையும் திருடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும்,மேலும் இது பெரிய வங்கிகளான பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் போன்ற வங்கிகளை குறிவைத்துள்ளது என எச்சரித்துள்ளது.

இதன் பெயர் டைரே என்றும் இது பிரெளசர் ஹூக்கிங் தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்பட்டது என்றும் இது வங்கியின் சர்வரில் நுழைந்து கணக்குகளை திருடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சிஸ் கூறியுள்ளது.

Leave a Reply