shadow

currencyஇந்திய ரிசர்வ் வங்கி புதிய வகை 1,000 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளது.

ரூபாய் சின்னம் பொறிக்கப்பட்ட புதிய 1000 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்ரு அறிவித்துள்ளது. ‘R’ என்ற எழுத்துடன் மகாத்மா காந்தி படத்துடன் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரூபாய் நோட்டுக்கள் வெளியாகும் என ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ரூபாய் நோட்டுக்கள் வெளியான ஆண்டைக் குறிப்பிடும் வகையில் 2014 என்று அதில் அச்சிடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் வழக்கம்போல செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply