shadow

Modi_Sriகடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட மைத்ரிபாலா சிறீசேனா, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, வரும் 16-ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கான தேதியை இரு நாட்டு அதிகாரிகளும் கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளனர். இலங்கை அதிபரின் இந்திய பயணத்தை தொடர்ந்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக மார்ச் 13-ஆம் தேதி இலங்கை செல்லவிருக்கின்றார்.

இலங்கையில் மூன்று நாள்கள் பயணம் மேற்கொள்ளும் மோடி, தமிழர்கள் அதிகம் வசிகம் பகுதியான யாழ்ப்பாணத்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக பிரபல ஆங்கில பத்திரிகை “சன்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அதிபர்  சிறீசேனாவின் முதல் வெளிநாட்டு பயணமே இந்தியாவுக்கு அவர் செய்யும் பயணம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply