shadow

Kamal-Nath-300x233தற்போதைய மக்களவையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. முதலில் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய சபாநாயகர் கமல்நாத் அனைத்து எம்.பிக்களுக்கும் இன்றும் நாளையும் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். மத்திய அமைச்சர் முண்டே மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பின்னர் இன்று மக்களவை ஒத்திவைக்கப்படுவதால் நாளையும் நாளை மறுநாளும் எம்பிக்கள் பதவியேற்கவுள்ளனர்.

எம்.பிக்கள் அனைவரும் பதவியேற்றபின்னர் வரும் 6ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

9ஆம் தேதி நடைபெறவுள்ள இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்..

Leave a Reply