shadow

தலைமை செயலாளருக்கு இணையாக புதிய பதவி: தமிழக கவர்னர் மீண்டும் அதிரடி

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவ்வப்போது தமிழகத்தில் ஆய்வு நடத்தி ஆளும் அரசுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் பதவிக்கு இணையான ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியையும் நியமித்துள்ளார்.

இதுவரை கவர்னரின் முதன்மைச் செயலாளர் என்கிற பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற பதவி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் மாநிலங்களுக்கிடையேயான குழுவின் முன்னாள் ஆலோசகருமான ராஜகோபால் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய அந்தஸ்தும் பொறுப்பும் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி அடுத்த அதிரடியாக தமிழக கவர்னரின் முதன்மைச் செயலாளராக இருந்து வரும் ரமேஷ் சந்த் மீனா மாற்றப்பட்டு தமிழ்நாடு தொழில்மேம்பாட்டுக் கழகமான டிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply