shadow

 5இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களின் கையெழுத்துடன் கூடிய ரூ.10 ரூபாய் நோட்டு விரைவில் வெளிவர இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்ட இந்த ரூ.10 ரூபாய் நோட்டு, 2005ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ரூ.10 நோட்டுகள் போன்று இருந்தாலும், சில மாறுதல்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

புதிய ரூ.10 நோட்டுகளில் பின்புறம் புதிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்து இடம்பெற்றுள்ளது என்றும், மேலும் இதற்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய பத்து ரூபாய் நோட்டுகள் வழக்கம் போல் புழக்கத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply