shadow

CRICKET-WC-2015-IRL-UAEஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது அயர்லாந்து அணி.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அன்வர் 106 ரன்கள் எடுத்தார்.

வெற்றி பெற 279 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியின் வில்சன் 80 ரன்களும், பிரெய்ன் 50 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் அணியில் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அன்வர் மற்றும் அம்ஜத் ஜாவித் ஆகியோர் 107 ரன்கள் எடுத்தனர். உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஏழாவது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து அணியின் வில்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply