shadow

பிரேசில் அதிபர் அதிரடி நீக்கம். புதிய அதிபராக துணை அதிபர் பதவியேற்றார்.

brazilகடந்த 2014ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தில்மா ரூசெப் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து தவறான தகவல் கூறியதாக் அவர் மீது சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்ததை அடுத்து பாராளுமன்றத்தில் தில்மா ரூசெப்பிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாராளுமன்றத்தில் 81 உறுப்பினர்களில், 61 பேர் ரூசெப்புக்கு எதிராக வாக்களித்ததால் தில்மா ரூசெப்பின் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது. அதே நேரத்தில், தில்மா ரூசெஃப், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பொதுப் பதவிகளை வகிப்பதற்கு எதிராக தடை விதிப்பதில்லை என்று செனட் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் துணை அதிபராக இருந்த மெக்கெல் டெமர் இன்று பிரேசில் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார். இவர் பதவியேற்றதை அடுத்து பிரேசில் நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் நடந்து வருகிறாது.

இதற்கிடையே தில்மா ரூசெப் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள் விமர்சனம் செய்துள்ளன. எனவே, அந்நாடுகளில் உள்ள தூதர்களை நாடு திரும்பும்படி பிரேசில் அழைத்துள்ளது. இதேபோல் வெனிசுலாவும் பிரேசில் நாட்டில் உள்ள தனது தூதரை திரும்ப பெற்றுள்ளது.

Leave a Reply