isai priya 4விடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அல்ஜசீரா தொலைக்காட்சி ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இசைப்பிரியா, சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கோரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டதாக கூறியது. ஆனால் சிங்கள ராணுவம் இதை மறுத்து வந்தது. தற்போது இந்த புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால் சிங்கள் அரசு கடும் நெருக்கடியில் உள்ளது.

ஐ.நா. மனித உரிமை கழகத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசு, இந்த புகைப்பட ஆதாரம் வெளியானதால் உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால படுகொலை நடந்த ஐந்தாவது வருட நினைவு தினமான நேற்று இந்த புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

isai priya- army isai priya 4 isai priya 3

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *