மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தில் இருந்து மொத்தம் 6 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 4 அதிமுக வேட்பாளர்கள் இன்று முறைப்படி அதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகிய 4 பேர்கள் தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் அவர்களிடம்  சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.  சட்டப் பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

நேற்றே திமுக வேட்பாளர் திருச்சி சிவா மற்றும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  டி.கே. ரங்கராஜன் ஆகியோர் சான்றிதழ் பெற்றுகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *