shadow

லட்சத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. மேலும் மழை நீடிக்க வாய்ப்பு
ramanan
சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடலூரில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மீட்புப்பணிகளில் தமிழக அமைச்சர்களும் அதிகாரிகளும் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இந்நிலையில் லட்சத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து, தென் கிழக்கு அரபிக்கடலை ஒட்டியுள்ள லட்சத்தீவு கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக, சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பொழிவு இருக்கும் என்றும் ரமணன் தெரிவித்தார்.

Leave a Reply