shadow

தேர்தல் வாக்குப்பதிவின்போது விரலில் மை வைக்க புதிய பேனா. தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெறும்போது வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விரலில் மை வைப்பதற்கு பதிலாக புதிய பேனா ஒன்றை தேர்தல் ஆணையம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வாக்குச்சீட்டு எலக்ட்ரானின் மிஷினாக மாறியது போலவே, தற்போது மை, பேனாவாக போகிறது. மைசூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலையில் இந்த பேனா தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. புதிய வகை பேனாவின் தயாரிப்புச் செலவு அடையாள மை பாட்டில் தயாரிப்பு செலவைக் காட்டிலும் குறைவே.

மேலும் ஒரு பே‌னாவை பயன்படுத்தி ஆயிரம் வாக்காளர்களின் விரல்களில் அடையாள மை வைக்க முடியும். இந்த பேனா ஜனாதிபதி தேர்தலில் இருந்து பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply