shadow

4,600 அடி உயரத்தில் அந்தரத்தில் நடக்கவேண்டுமா? சீனாவில் ஒரு அதிர வைக்கும் கண்ணாடி பாலம்.
4
தெற்கு சீனாவில் 4,600 அடி உயரத்தில் மலை மீது அந்தரத்தில் நடக்கும் அனுபவத்தை தரும் வகையில் ஒருசிறிய பாலம் திறக்கப்பட்டுள்ளது. வெறும் ஐந்து அடி அகலம் மட்டுமே உள்ள இந்த கண்ணாடி பாலத்தில் நடக்கும் அனுபவத்தை பெற உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தெற்கு சீனாவில் Tianmen Mountain என்ற உயர்ந்த மலை உள்ளது. 4600 அடி உயரமுள்ள இந்த மலையை ஒட்டி ஒரு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வெறும் 5 அடி அகலம் மட்டுமே உள்ள இந்த கண்ணாடி பாதையில் நடந்தால் அந்தரத்தில் நடப்பது போன்ற அனுபவம் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும்.

நேற்று முன் தினம் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்த கண்ணாடி பாலம்  திறக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த அந்தரத்தில் நடக்கும் அனுபவத்தை பெற இந்த மலைப்பகுதிக்கு குவிந்து வருகின்றனர்.

4 5 10 9 8 6

Leave a Reply