கோவா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர்: காங்கிரஸ் வலியுறுத்தல்

கோவா மாநில முதல்வராக இருந்து வரும் மனோகர் பாரிக்கர் உடல்நலமின்றி கோவாவிலும் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்று வருவதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோவா காங்கிரசை சேர்ந்த கிரிஷ் சோடோன்கர் செய்தியாளர்களிடம் கூறியபோது, கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும். முதல் மந்திரி முறையாக பணி செய்யாததால் நிர்வாகம் ஐசியுவில் உள்ளது. எனவே, முதல் மந்திரி அலுவலகம் கோவா மக்களுக்கு முதல் மந்திரியின் உடல் நிலை குறித்து உண்மையை விளக்க வேண்டும்.

கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுவதால், மனோகர் பாரிக்கர் தகுந்த நபரிடம் தாது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *