shadow

3வது டெஸ்ட் போட்டியில் ஸ்டெயினுக்கு பதிலாக புதிய பந்துவீச்சாளர்.

cricketஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் மழை காரணமாக டிரா ஆனது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முதலாவது டெஸ்ட்டில் காயமடைந்த தென்னாபிரிக்காவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஸ்டெயின் இரண்டாவது போட்டியிலும் விளையாடவில்லை. காயம் இன்னும் குணம் ஆகாததால் அவர் 3வது டெஸ்ட்டிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்சந்த் டி லங்க் தென்ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 3½ ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு மார்சந்த் டி லங்க் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“மார்சந்த் டி லங்கின் மிகப்பெரிய பலமே வேகமாக பந்து வீசும் திறன் தான். தொடக்கத்திலேயே அவர் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்தால் அது அணிக்கு அனுகூலமாக இருக்கும். அவரால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச முடியும்.’’என்று தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ குறிப்பிட்டார். இவருடைய வரவு தென்னாப்பிரிக்காவுக்கு 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெறமுடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply