shadow

50 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? பரவி வரும் வதந்திகள்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் எந்த நேரத்திலும் ரூ.2000 நோட்டுக்களும் செல்லாது என்று அறிவிப்பு வரலாம் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் அவ்வப்போது பரவி வருகிறது. இந்த நிலையில் ரூ.50 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக புதிதாக அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டின் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடல் நீலநிறத்தில் காட்சியளிக்கும் 50 ரூபாய் நோட்டுக்கள் புத்தாண்டு முதல் புழக்கத்திற்கு விடப்படும் என்ற தகவல் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நோட்டு புழக்கத்திற்கு வந்தவுடன் பழைய ரூ.50 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வருமோ? என்ற ஐயம் பலரது மனதி எழுந்துள்ளது.

ஏற்கனவே புதிய 200 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும் என்று கூறப்பட்டு, புதிய 200 ரூபாய் நோட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply