shadow

shadow

இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள லேபரேட்டரில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள சுமார் 600 மாணவர்கள் உள்ளே இருப்பதாகவும், அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு படைத்துணை தலைவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டிங்காம் பல்கலைக்கழத்தில் உள்ள கிளாஸ்கோ ஸ்மித்கிளின் கார்பன் நியூட்ரல் லேபரேட்டரியில் நேற்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் லேபரேட்டரில் இருந்த வேதிப்பொருட்கள் தீயில் சிக்கி வெடித்து சிதறின. பல்கலைக்கழக வகுப்பறையில் உள்ள மாணவர்கள் உடனடியாக கதவுகளை மூடிவிட்டு தீயணைப்பு படையினர் சொல்லும்வரை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தீவிபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் சுமார் 60 தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தின் உள்ளே சுமார் 600 மாணவர்கள் தங்கியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினசரி வந்து கல்வி பயில்கின்றனர். 65 ஏக்கர் பரப்பளவு சர்வதேச தரத்தில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இங்கிலாந்து நாட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து காரணமாக சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply