shadow

புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட மத்திய அரசு அனுமதி

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இந்திய அரசால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் புதிய ரூ.500, ரூ.2000, ரூ.200, ரூ.20 ஆகிய நோட்டுக்கள் புழக்கத்திற்கு வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது ரிசர்வ் வங்கி பெற்றுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டுக்க்கு பின்னர் புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய 10 ரூபாய் நோட்டுகள், சாக்லேட் நிறத்தை அடிப்படையாக கொண்டும், கோனார்க் தங்க கோவிலின் படத்துடனும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் 10ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் முடியவில்லை என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply