shadow

14aaசத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தீவிரவாத செயல்புரியும் வீரா என்பவனை அழிக்க ஐந்து பேர் கொண்ட குழு செல்கிறது. வெற்றிகரமாக வீராவையும் அவனது குழுவினர்களையும் கொன்றுவிட்டு திரும்புகின்றனர். அபோதுதான் வீராவின் மிகவும் நெருக்கமான பிரசன்னா காட்டில் அட்டகாசம் செய்வதை கேள்விப்படுகின்றனர். எனவே பிரசன்னாவையும் வேட்டையாட அதே ஐவர் குழு செல்கிறது. செல்லும் வழியில் நாயகி அருந்ததியை அவர்கள் சந்திக்கின்றனர். பிரசன்னாவை தனக்கு தெரியும் என்றும், அவனை பிடிக்க தான் உதவுவதாகவும் சொல்லும் அருந்ததியை நம்பி ஐவரும் அவள் பின்னால் செல்கின்றனர்.

இந்நிலையில் வீரா புதைத்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் இந்த குழுவினர் கையில் சிக்குகிறது. இதை அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் நாமே பங்குபோடலாம் என அவர்கள் திட்டமிட, இதற்கு அந்த குழுவில் இருக்கும் ரிச்சர்ட் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றார். எனவே ரிச்சர்ட்டை கொலை செய்துவிட்டு பணத்தை கைபற்ற மற்றவர்கள் நினைக்கின்றனர். இது நேற்று நடந்த கதை.

இதே படத்தின் இன்று ஒரு கதை நடக்கின்றது. அதே சத்தியமங்கலம் காட்டிற்கு படத்தின் இன்னொரு நாயகி மனோசித்ரா காரில் கபினி போஸ்ட் என்னும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது வழியில் கார் பழுதாகிறது. கார் மெக்கானிக் விமல், பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் உன்னை கபினி போஸ்ட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறுகிறார். ஐந்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு மீதியை கபினி போஸ்ட் சென்றவுடன் தருவதாக கூறுகிறார் மனோசித்ரா. இந்நிலையில் வழியில் மனோசித்ராவின் பர்ஸ் தொலைந்துவிடுகிறது. மீதி ஐந்தாயிரத்திற்கு என்ன செய்வது என குழப்பத்தில் இருக்கும் மனோசித்ராவிடம், ஐந்தாயிரத்திற்கு பதில் உன்னையே கொடுத்துவிடு என்கிறார். மனோசித்ராவும் தன்னை கபினி போஸ்ட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டால் தன்னையே கொடுப்பதாக கூறுகிறார்.

தன்னையே கொடுத்து கபினி போஸ்ட் செல்லும் அளவிற்கு என்ன அப்படி முக்கியமான வேலை. பிரசன்னாவை தேடி சென்ற ஐவர் குழுவினர் என்ன ஆனார்கள். இந்த இரண்டு கதையையும் இணைக்கும் இடம் எது என்பதுதான் மீதிக்கதை.

குடிகார மற்றும் பெண் பித்தர் வேடத்திற்கு மிகப்பொருத்தமாய் இருக்கிறார் விமல். அலட்டல் இல்லாமல் நடித்து பெயரை தட்டி செல்கிறார்.

நேர்மையானவராக வரும் ரிச்சர்ட் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல்பாதி காமெடி மட்டும் அருந்ததியின் கவர்ச்சியிலேயே சென்றுவிடுகிறது. இரண்டாவது பாதி விறுவிறுப்பும் திருப்பமும் நிறைந்ததாக இருக்கின்றது.

படத்தில் உள்ள இரண்டு கதாநாயகிகளும் நடிப்பை விட கவர்ச்சியை காட்டுவதில் கில்லாடிகள் என தெரிகிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார்தான். ரெஹான் இன்னும் தேற வேண்டும். திரைக்கதையை குழப்பாமல் கடைசியில் இரண்டு கதையையும் இணைத்த வகையில் இயக்குனரை பாராட்டலாம். மொத்தத்தில் நேற்று இன்று போரடிக்கவில்லை.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1ntwVH5″ standard=”//www.youtube.com/v/xWmcWyJ-GWY?fs=1″ vars=”ytid=xWmcWyJ-GWY&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1378″ /]

Leave a Reply