அப்படியே ‘திரெளபதி’ பக்கம் கொஞ்சம் வாங்க: பா.ரஞ்சித்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சமீபத்தில் வெளிவந்த ஆணவ கொலைகள் குறித்த திரைப்படமான கன்னிமாடம் என்ற திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர் பா ரஞ்சித் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டில் அவர் கூறியதாவது:

கன்னிமாடம் திரைப்படம் இயல்பான திரையோட்டத்தில், சமரசமில்லாமல் #ஆணவக்கொலைகள் குறித்து, தான் சொல்ல நினைத்த கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் போஸ்வெங்கட் அவர்களுக்கும், அத்திரைப்பட குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

இந்த ட்விட்டுக்கு நெட்டிசன்கள் கேலியான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஆணவகொலை படத்தை மட்டும் பாராட்டும் ரஞ்சிதா அப்படியே திரௌபதி படத்தையும் பார்த்து தனது கருத்தை தெரிவிக்கலாமே? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நெட்டிசன்களின் இந்த கோரிக்கையை ஏற்று ‘திரெளபதி’ படத்தையும் பா.ரஞ்சித் பார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply