shadow

மூன்று படம் நடித்தவர் மூன்றாம் கலைஞரா? நெட்டிசன்கள் கிண்டலால் திமுகவு அதிர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் கொடுத்ததையே இன்னும் பலர் கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது மகன் ஸ்டாலினை இரண்டாம் கலைஞர் என்றும், பேரன் உதயநிதியை மூன்றாம் கலைஞர் என்றும் திமுகவினர் புகழ்ந்து வருவதை நெட்டிசன்கள் கிழிகிழி என்று கிழித்து வருகின்றனர். மதுரை அருகே நடைபெறவுள்ள திமுக கூட்டம் ஒன்றுக்கு ‘மூன்றாம் கலைஞர் உதயநிதி அவர்களே வருக வருக என பிளக்ஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

முதலாம் ராஜராஜசோழன், இரண்டாம் ராஜராஜசோழன் போல் பரம்பரையாக வருவதற்கு இது என்ன மன்னர் ஆட்சியா? கலைஞர் என்ற பட்டம் அவர் படித்து வாங்கி பட்டமா? அப்படியே அந்த பட்டம் அவருக்கு பொருந்தும் என்றாம், மூன்று படம் நடித்த நடிகருக்கெல்லாம், அந்த பட்டத்தை தொடர வேண்டுமா? என சமூக வலைத்தள நெட்டிசன்கள் கடுமையாகவும், கேலியும் கிண்டலுமாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்

இதுகுறித்து திமுகவை சேர்ந்தவரே ஒரு பதிவில், ‘இரண்டாம் ஸ்டாலின் என்று கூட சொல்ல அரசியல் தகுதி பெறாதவர் உதயநிதி… ஸ்டாலினின் அரசியல் பயணமும் நெடிய அனுபவம் கொண்டது. கலைஞரின் அரசியல் ஞானத்தின் பாதியை கூட ஸ்டாலினுக்கு சொல்ல முடியாது. அதில் 5% கூட இல்லாதவர் உதயநிதி. இவர் மூன்றாம் கலைஞராம். எரிச்சல் வருமா வராதா?” என்று பதிவு செய்திருந்தார்

நெட்டிசன்களின் கிண்டலை அடுத்து உதயநிதிக்கு வைத்திருந்த மூன்றாம் கலைஞர் என்ற பிளக்ஸ்போர்டு நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply