shadow

நாட்டின் பாதுகாப்புகளை ஆராய்ந்த பின்னர் நேதாஜியின் கோப்புகளை வெளியிடுவோம். மம்தா பானர்ஜி
nethaji
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மங்கள் அடங்கிய கோப்புகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என நேதாஜியின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் நேதாஜி சம்பந்தமாக மேற்கு வங்க மாநிலத்தின் கீழ் உள்ள கோப்புகள் வெளியிடப்படும் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மம்தா கூறும்போது, “வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு காரணமாக நாங்கள் இந்தக் கோப்புகளை வெளியிட முடிவு செய்துள்ளோம். மக்களுக்கு தெரிவது அவசியம்.

சுபாஷ் சந்திர போஸ் இங்கு வாழ்ந்துள்ளார். இங்கிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கிறார், தனது போராட்டங்களை இங்கிருந்தே நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள முடியவில்லை. இது புதிரானது.

இந்தக் கோப்புகள் தற்போது தயார் செய்யப்பட்டு போலீஸ் ஆவணக் காப்பகத்தில் அனைவரும் படிக்க வசதியாக வைக்கப்படவுள்ளது. ஊடகங்கள்தான் உண்மையைக் கண்டறிய வேண்டும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் பல கோணத்தில் ஆராய்ந்த பிறகே கோப்புகளை வெளியிடும் முடிவு எட்டப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply