shadow

நேதாஜியின் இறுதிச்சடங்கு தைவானில் நடந்தது. ஆதாரத்தை வெளியிட்டது இங்கிலாந்து இணையதளம்
nethaji
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் மரணம் குறித்த மர்மம் இன்னும் நீங்காத நிலையில் அவரது இறுதிச்சடங்கின் ஆதாரத்தை இங்கிலாந்து இணையதளம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட ‘இந்திய தேசிய ராணுவம்’ என்ற படையை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்தார் என கூறப்பட்டாலும் அதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் நேதாஜி மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து நிலவி வந்தது. விமான விபத்திற்கு பின்னர் நேதாஜி ரஷியாவில் தலைமறைவாக இருந்து வந்ததாகவும், விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நேதாஜி மரணம் தொடர்பான புதிய ஆதாரத்தை இங்கிலாந்து இணையதளம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நேதாஜி 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம்தேதி தைவான் நாட்டின் தைபே புறநகர் பகுதியில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடல் இறுதிச்சடங்கு தைவானிலேயே நடந்தது என்று கூறப்பட்டுள்ளது.

அப்போதைய தைவான் நாட்டு அதிகாரி தன்திதி என்பவர் இறுதிச்சடங்கு நடத்த அனுமதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் அலுவலக ஆவணம் எண். எப்.சி.1852/6–ல் இதுதொடர்பான தகவல் உள்ளது. 1956–ல் இந்த தகவல் அனுப்பப்பட்டது. பின்னர் இந்த தகவல் டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மூலம் 1956–ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

தைவான் நாட்டிற்கான இங்கிலாந்து தூதர், நேதாஜி மரணம் தொடர்பாக தைவான் அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு தைவான் அரசு 1956ஆம் ஆண்டு ஜூன் 27ஆம்தேதி உரிய பதில் அளித்துள்ளதாகவும் இங்கிலாந்து இணையதளம் தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது

Leave a Reply