shadow

site_2706132f

இணையத்தின் முன்னணி வீடியோ ஸ்டீரிமிங் சேவையான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் விரிவாக்கம் செய்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸில் கட்டணம் செலுத்தி புதிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். கட்டணத்தை மாதச் சந்தவாகச் செலுத்தும் வசதிதான் நெட்ஃப்ளிக்ஸின் கவர்ச்சிகரமான‌ அம்சம்.

இந்தியாவில் இந்தச் சேவை எப்படிச் செயல்படும், என்ன விதமான வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றாலும், நெட்ஃப்ளிக்ஸ் ஒரு விதத்தில் பயனாளிகளை நிச்சயம் குழப்ப‌த்தில் ஆழ்த்தலாம். அது வழங்கும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எல்லோரும் பார்த்துவிட முடியாது. அவற்றில் பல குறிப்பிட்ட நாடுகளின் காப்புரிமை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை.

எனவே பயனாளிகள் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் பொருத்தே அவர் பார்க்கக் கூடிய உள்ளடக்கம் அமையும். ஒருவேளை உங்களுக்குக் குறிப்பிட்ட படம் அல்லது நிகழ்ச்சி எந்தெந்த பகுதியில் பார்க்கலாம் என்பது பற்றிய தகவல் தேவை என்றால் ‘ஃப்ளிக்ஸ்ட்.இயோ’ தளம் அதற்கு வழி செய்கிறது. இந்தத் தளத்தில் எந்தெந்தப் பகுதியில் எந்தப் படங்களை எல்லாம் பார்க்க முடியும் என எளிதாகத் தேடலாம்.

இணையதள முகவரி: //flixed.io/

Leave a Reply