shadow

nehru and patelகாஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்கும் பொறுப்பை ஜவஹர்லால் நேருவுக்கு பதிலாக சர்தார் பட்டேலிடம் கொடுத்திருந்தால் அவர் இந்த பிரச்சனையை அன்றே தீர்ந்திருப்பார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறி உள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கர்நாடகா மாநிலம் கோர்தா கிராமத்திற்கு வருகை வந்த பாஜக தலைவர் அமீத்ஷா, அதன்பின்னர் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நினைவகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,  ”பிரிவினைக்கு பின் காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தானிடம் சென்று விட்டதால், சிறப்பு அந்தஸ்து என்ற நிலையில் தனி சட்டம் மற்றும் 370 பிரிவு ஆகியவற்றை இயற்றும் சூழ்நிலை நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது சோகமானது.

சுதந்திரத்திற்கு பின்பு மாநிலங்களை ஒன்றிணைப்பதில் தைரியம் கொண்டவரும், ஐதராபாத் மற்றும் ஜுனாகார் ஆகியவற்றை ஏற்று கொண்டவருமான சர்தார் பட்டேலிடம், ஜவஹர்லால் நேருவுக்கு பதிலாக காஷ்மீர் ஒன்றிணைப்பு விவகாரத்தை கொடுத்திருந்தால் காஷ்மீர் பிரச்னையை அவர்  அன்றே தீர்த்து வைத்திருப்பார்.

தேசத்தின் மீதான பட்டேலின் ஈடுபாடு என்பது அவருக்கு பின்னர் அவரின் குடும்பத்தினர் யாரும் அரசியலுக்குள் நுழையவில்லை.  அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது.  சட்டம் படித்த முக்கிய நபராக இருந்தாலும், அவரது வங்கி கணக்கில் 150 ரூபாய் தான் அவர் மரணம் அடைந்தபோது இருந்தது” என்று கூறினார்.

Leave a Reply