shadow

aarya copyசிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சங்க’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘லக்கா மாட்டிகிச்சு’ என்ற பாடலின் ஒரு நிமிட டீசர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று முன் தினம் வெளியாகியது.

ஆனால் எம்.ராஜேஷின் முந்தைய படங்களில் வரும் டான்ஸ் ஸ்டெப்ஸ்கள் போலவே இந்த பாடலிலும் இருப்பதாகவும், நடன இயக்குனர் தினேஷின் நடன அமைப்புகள் பெரும்பாலும் ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் நடன அமைப்பையே திரும்பவும் காப்பி அடித்துள்ளதாகவும் டுவிட்டரில் கமெண்டுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கைலியை கட்டிக்கொண்டு கையில் பாட்டில் வைத்து கொண்டு இன்னும் எத்தனை பாடல்கள்தான் எம்.ராஜேஷ் எடுப்பார் என ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டுள்ளதால் ஆர்யா உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆர்யாவின் 25வது படம், ஆர்யா-தமன்னா இணையும் முதல் படம் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் டீசர், விளம்பரத்திற்கு பயன்படும் என்று நினைத்த படக்குழுவினர் தற்போது நெகட்டிவ் கமெண்டுக்கள் வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply