shadow

சூர்யாவின் S3′ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நாயகி

neetuchandraஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமான S3′ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் சூர்யாவின் அறிமுகப்பாடலை சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கம்போஸ் செய்து முடித்தார்.

‘ஓ சோனே சொனே சூப்பர் சோனிக்’ என்று தொடங்கும் இந்த பாடலின் படப்பிடிப்பு மிகப் பிரமாண்டமான அரங்கில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது

இந்த பாடலில் சூர்யாவுடன் இணைந்து நடனம் ஆட பிரபல நடிகை நீதுசந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நீதுசந்திரா ஏற்கனவே ‘தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம், யுத்தம் செய், ஆதிபகவான், சேட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply