அம்பானி மனைவியை ஏமாற்றிய அம்மன் கடவுள்

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு சில மண் நேரத்திற்கு முன்னர் மும்பை அணியின் உரிமையாளரும் தொழிலதிபர் அம்பானியின் மனைவியுமான நீட்டா அம்பானி, ஐதராபாத்தில் உள்ள சக்தி வாய்ந்த யெல்லம்மா அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது அவர் நேற்றைய போட்டியில் மும்பை வெற்றி பெற வேண்டும் என்று வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. முதலில் பேட்டிங் செய்து 138 ரன்கள் மட்டுமே மும்பை எடுத்திருந்த நிலையில் இந்த இலக்கை ஐதராபாத் அணி 18.2வது ஓவரிலேயே எடுத்து வெற்றி வாகை சூடியது.

மும்பையில் இருந்து வந்து பூஜைகள் செய்தபோதும் உள்ளூர் அணிக்கே யெல்லம்மா அம்மனின் கடைக்கண் பார்வை பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஜ்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *