shadow

அக்டோபர் 30-க்குள் பள்ளி மாணவர்களின் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் உத்தரவு

Aadhar-Card-400x226ரேசன் கார்டு முதல் கேஸ் மானியம் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியம் என்ற நிலை தொடர்ந்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் அவசியம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை, நலத்திட்ட உதவிகள் ஆகியவை முறைகேடு இல்லாமல் உண்மையான மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கவும், போலி மாணவர்கள் உள்பட முறைகேடு நடக்காமல் தடுக்கும் விதமாகவும் மாணவர்களின் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

மாணவர்களின் பட்டியலோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த செப்டம்பர் 30க்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்த போதிலும் இன்னும் சில மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தி, அதை பதிவு செய்ய கால அவகாசம் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 30ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலோடு அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து முடிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply