shadow

16இந்தியில் வித்யாபாலன் நடித்து மாபெரும் ஹிட்டான கஹானி திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்காக கதையில் சிறுமாறுதல் செய்து இயக்கியிருக்கிறார் சேகர் கம்முலா. பிரபல நாவலாசிரியர் எண்டமூரியின் வீரேந்திர நாத் அவர்களின் துணையோடு வெற்றிப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா என்றுதான் சொல்ல வேண்டும்.

அமெரிக்காவில் இருந்து ஐதராபாத் வரும் நயன்தாரா, நேராக காவல்நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் வைபவ்விடம் தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுக்கின்றார் நயன்தாரா. இருவரும் சேர்ந்து நயன்தாராவின் கணவரை தேடும் முயற்சியில் ஈடுபடும்போது தனது கணவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதை நயன்தாரா அறிந்து கொள்கிறார். இந்நிலையில் போலீஸ் உயரதிகாரி பசுபதி, ஐதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றுக்கு நயன்தாராவின் கணவர்தான் காரணம் என குற்றம் சாட்ட, அதற்கு நயன்தாரா மறுக்கிறார். அவர் ஒரு இன்ஜினீயர் என்றும் இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட மாட்டார் என்றும் அவர் மறுக்கிறார்.

இந்நிலையில் தீவிரவாதிகள் தேடிக்கொண்டிருந்த ஹார்ட் டிஸ்க் ஒன்று நயன்தாரா கையில் சிக்குகிறது. அதை தெரிந்து கொண்ட தீவிரவாதிகள் ஹார்ட் டிஸ்க்கை கொடுத்தால் உன் கணவரை ஒப்படைக்கிறோம் என்று கெடு விதிக்கின்றனர்.

இறுதியில் நயன்தாரா தனது கணவரை காப்பாற்றினாரா? தீவிரவாதிகள் பிடிபட்டார்களா? என்பதே கதை.

நயன்தாராவை சுற்றியே கதை முழுவதும் பின்னியிருப்பதால், நயன்தாராவின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு படமாக இது அமைந்துள்ளது. அவரும் ஏமாற்றாமல் தனது தனுபவத்தை கொண்டு சிறப்பாக செய்துள்ளார். வேறு எந்த நடிகை நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

வைபவ், பசுபதி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை மிகச்சிறப்பாக செய்துள்ளனர். திடுக்கிடும் திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்த எண்டமூரி வீரேந்திர நாத் அவர்களுக்கு பாராட்டுக்கள். பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசையை மிகச்சிறப்பாக செய்துள்ளார் கீரவானி

தொய்வில்லாத திரைக்கதை, நயன்தாராவின் நடிப்பு, இந்த இரண்டுகாகவே ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

Leave a Reply