தமிழ், தமிழ் என்று கூறும் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை. நெடுமாறன்
pazha.nedumaran
தமிழ், தமிழ் என்று கூறிக்கொண்டும் முத்தமிழ் அறிஞர் என்று கூறிக்கொண்டும் இருக்கும் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த நெடுமாறன் கூறியதாவது: ஈழத் தமிழர் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த அரசியல் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ், தமிழ் எனக் கூறும் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை.

சட்டப் பேரவைக்கே செல்லாத எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், எப்படி முதல்வராக செயல்பட முடியும்? சட்டப் பேரவைக்குச் சென்று கேள்வி கேட்காத காரணத்தால் ஆளும் கட்சி செய்யும் தவறுகளுக்கு இவர்களும் காரணமாகின்றனர்.

தமிழ்நாட்டில் 3-வது அணி அமைய வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள மக்கள் நலக்கூட்டணி, பாமக ஆகிய கட்சிகள் திராவிட கொள்கைகளையே பின்பற்றுகின்றன. எனவே, இந்த கட்சிகள் 3-வது அணி கிடையாது. தமிழ்நாட்டில் கொள்கை அடிப்படையில் எந்த கூட்டணியும் அமைக்கப்படவில்லை. தேர்தலுக்கேற்ப சந்தர்ப்பக் கூட்டணியே அமைக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவோம் என கேரள கம்யூனிஸ்ட் கட்சியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்போம் என தமிழக கம்யூனிஸ்டுகளும் கூறியுள்ளனர். இது முரண்பாடானது.

இவ்வாறு அவர் கூறினார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *