shadow

vali_2234003f

குனிந்த தலை நிமிராமல் ஸ்மார்ட் போனையே பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. “ஸ்மார்ட் போன்களால் கழுத்து வலி உண்டாகும் அபாயம் உள்ளது. இதைப் பற்றி யோசிப்பது அவசியம்” என எச்சரிக்கிறார் அமெரிக்க மருத்துவரான டாக்டர் கென்னத் ஹான்ஸ்ராஜ். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும்போது நாம் கழுத்தை வைத்திருக்கும் விதம் கழுத்து மீதான சுமையை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 மணி நேரம் ஸ்மார்ட் போனில் செலவிடுவதால் கழுத்து வலி பாதிப்பு ஏற்படலாம் என அவர் எச்சரிக்கிறார். இதற்கு டெக்ஸ்ட் நெக் எனப் பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே பிளாக்பெரி தம்ப், ஐபேட் தம்ப் ஆகிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இப்போது இந்தப் புதிய வலி சேர்ந்திருக்கிறது.

Leave a Reply